முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என நினைத்துவிட்டார் போலிருக்கிறது விமலா ராமன். தமிழில் அவர் நடித்ததெல்லாம் குடும்பப் பாங்கான வேடங்களே. ...
முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என நினைத்துவிட்டார் போலிருக்கிறது விமலா ராமன்.
தமிழில் அவர் நடித்ததெல்லாம் குடும்பப் பாங்கான வேடங்களே. அதுவும் கூட பெரிதாகக் கை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தெலுங்குப் படவுலகம் பக்கம் போனவருக்கு, அவரது 'பேமிலி' இமேஜே எதிரியாக மாற, லேசான கவர்ச்சி காட்டி ஆல்பம் தயாரித்து அனுப்பி வைத்தார்.
கைமேல் பலன் கிடைத்தது. லவர் பாய் என்ற படத்தில் தருணுக்கு ஜோடியாய் நடிக்கிறார். இந்தப் படத்தை இப்போது 'சக்குலன்டி அம்மாயி சக்கனைனா அப்பாயி' என்று பெயர் மாற்றி எடுத்து வருகிறார்கள்.
இதில் சில காட்சிகளில் நீச்சலுடையில் நடிச்சே தீரணும் என இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒற்றைக் காலில் நிற்க, ஸ்விம் சூட்டுக்கு மேல் ஒரு மெல்லிய கோட் போட்டுக் கொண்டு நடித்துக் காட்டினாராம். ஸ்டில்களைப் பார்த்தவர்களுக்கு ஒரு கிக்கே வரவில்லையாம்.
அட என்ன இது... நீச்சல் உடை காட்சி என்றால் சும்மா ஜிவ்வுன்னு இருக்க வேணாமா... இது ஜவ்வா இருக்கே என கமெண்ட் அடித்தாராம் தயாரிப்பாளர்.
பார்த்தார் விமலா... இனி சாண் என்ன முழமென்ன என்ற முடிவோடு கோட்டைக் கடாசிவிட்டு குளத்தில் முங்கி எழுந்தாராம்....
தயாரிப்பாளர் செம ஜிவ்வாகி மயக்கமே போட்டு விட்டாராம்...!
Comments
Post a Comment