ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு திடீர் விஸிட் அடித்தார் முதல்வர் கருணாநிதி. காரணம், அவரது கதை - வசனத்தில் உருவாகும் பெண் சி...
ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு திடீர் விஸிட் அடித்தார் முதல்வர் கருணாநிதி.
காரணம், அவரது கதை - வசனத்தில் உருவாகும் பெண் சிங்கம் படப்பிடிப்பை மேற்பார்வையிடத்தான்!.
கோர்ட்டில் நடக்கும் காரசார வாக்குவாதத்தைப் படமாக்குவதற்காக படக்குழுவினர் ஸ்டூடியோவில் குழிமியிருந்தனர்.
அன்றைக்கு வக்கீல் கேரக்டரில் நடிக்கவிருந்தவர் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. 'சூப்பர் ஹீரோ'வாக நடித்தவர், தன் தலைவருக்காக இந்தப் படத்தில் கௌரவ ரோலில் வருகிறாராம்!
கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணையில் ஜே.கே.ரித்தீஷூம், ரோஹிணியும் வாதிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட வேண்டும். எல்லோருமே முதல்வரைப் பார்த்த பதற்றத்தில இருந்தனர். பின்னர் அவர்களை நிதானமாக நடிக்கச் சொல்லிவிட்டு அந்தக் காட்சிக்கான வசனங்களை, படப்பிடிப்பு தளத்திலேயே எழுதினாராம் கலைஞர்.
பின்னர் கலைஞர் கொடுத்த வசனங்களை அவர் எதிரிலேயே அட்டகாசமாகப் பேசி, முதல் டேக்கிலேயே ஓகே வாங்கியிருக்கிறார் ஜே.கே.ரித்தீஷ்.
அவருக்கு வசன கரெக்ஷன் பார்த்தவரும் முதல்வர்தான் என்பது குறிப்பிடத்தக்கது!
பிற்பகல் வரை கருணாநிதி ஸ்பாட்டிலேயே இருந்து படப்பிடிப்பை மேற்பார்வையிட்டார். நேற்றைய காட்சியில் நடித்த மீரா ஜாஸ்மின் முதல்வரிடம் ஆசி பெற்றார்.
பின்னர் மதிய உணவு நேரத்தில் முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.
Comments
Post a Comment