கந்தசாமி படத்தின் பரபரப்பு பட்டென்று அடங்கிப்போக ஸ்ரேயா அவ்வளவுதான் என்று சொன்ன வாய்களை குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு என மூன்று படங்க்கள...
கந்தசாமி படத்தின் பரபரப்பு பட்டென்று அடங்கிப்போக ஸ்ரேயா அவ்வளவுதான் என்று சொன்ன வாய்களை குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு என மூன்று படங்க்களில் நடித்து முடித்து குட்டி பட்த்தின் ரிசல்டுக்காக காத்திருக்கிறார் ஸ்ரேயா.
என்றாலும் தமிழ்சினிமாவின் ஹாட் கேக்காகவே இருக்கிறார் இன்னும். இன்னொரு பக்கம் பொல்லாதவன் படிக்காதவன் யாரடி நீ மோகினி என வரிசையாக மூன்று வெற்றிகளைக் கொடுத்து விட்டு பால் மணம் மாறாத பாலகன் போல இருக்கிறார் ஃபாக்ஸ் ஆபிஸ் ஹீரோ தனுஷ்.
இந்த இரண்டு மெகா நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் சிக்கினால் விடுவோமா? சிக்கிய இடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள 4பிரேம்ஸ் பிரிவியூ திரையரங்கின் விஐபி லான். குட்டி படத்தின் பொங்கல் ரிலீஸ் பத்திரிகையாளர் சந்திப்புக்காக வந்திருந்த இருவரையும் சந்திப்பு முடிந்ததும் தனியே ஒதுக்கினோம். இருவரிடமும் மாற்றி மாற்றி கேள்விகளை வீசியதில் சளைக்காமல் இருவரும் பதிலை விளாசித் தள்ள நமக்கே நமகென்று அமைந்து விட்டது இந்த டூயட் பேட்டி!
முதல் கேள்வி ஸ்ரெயாவிடம்...
கந்தசாமி படத்தில் கதையை மீறி ஏன் இத்தனை கவர்ச்சியாக நடித்தீர்கள்?
கதையை மீறிய க்ளாமர் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். இயக்குனர் பிரேமில் என்ன எதிர்பார்க்கிராரோ அதைச் செய்பவள்தானே நடிகை. வெளிநாட்டில் படித்து விட்டு வருகிற பெண்ணின் கல்சர் அது. வெளிநாட்டு சூழ்நிலைகளில் வாழ்ந்த சுப்புலட்சுமி வேறு எப்படி உடை அணிய வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள். இந்தியாவில் இருக்கும் பெண்கள் எப்படி உடை அணிகிறார்கள் என்று ஜவுளிக்கடைக்கு போய் பாருங்கள். அங்கே விற்பனைக்கு இருக்கும் ஆடைகள் இங்கே உள்ள டிரஸ்சிங் பவேர்ட்டியை சொல்லும்.”
தனுஷ் குறுகிட்டு “ நல்லா சாமளிக்கிறீங்க” என்று சொல்ல வெட்கபட்ட ஸ்ரேயா “ நோ தனுஷ் ...! திஸ் இஸ் த கரண்ட் டிரெண்ட். “
என்றவரிடம் ஆனா இதுதான் இன்றைய இளைஞர்கள் மனசுல தேவையில்லாத சபலத்தையும் ஷாக்கையும் உண்டு பண்ணுது? என்றோம்.
“ ப்ளீஸ் திஸ் இஸ் பிக் டாபிக். அஸ்க் மி த நெக்ஸ்ட் ஒன்” என்றார்.
கொஞ்சம் கூலாகுங்க. அதுக்குள்ள தனுஷ்கிட்ட கெட்டுட்டு வந்துடுரேன் என்றபடி... “உங்க அண்ணனோட ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸ் ஆகும் அதே நேரத்துல உங்க படத்தையும் ரிலீஸ் பன்றீங்க? “ என்று கேள்வியை முடிக்கும் முன்பே முந்திக்கொண்டு பதில் சொன்னார் தணுஷ்.
“ என்ன போட்டியான்ணுதானே கேக்குறிங்க. அந்தப் படத்தோட கம்பேர் பண்ணும்போது குட்டி ஒரு கொசு மாதிரி. ஆனா கொசுதான் சுள்ளுன்ணு போடும். அப்படித்தான் குட்டியும் ரொம்ப டிஸ்டர்ப் பன்ற படமா இருக்கும். “ என்ற தனுஷிடம் முதலில் உங்கள் அண்ணன் பிறகு வெற்றிமாறன் சுராஜ் இப்போது மித்ரன் கே. ஜவகர்ண்ணு ஒரே இயக்குனர்களோட படங்கள்ல அடுத்தடுத்து நடிக்கிற ரகசியம் என்ன? என்றதும்
“ இந்த கேள்வியை நான் எதிர்பார்த்தேன். நீங்க சொன்ன மூணு டைரக்டர்சும் ஒவ்வோரு வகையில டேலண்ட்ஸ். கேரக்டரிஷேசன்ல வெற்றிமாறனை யாரும் அடிச்சுக்க முடியாது. இவங்க எனக்கு கிப்டா கிடைச்சதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்.” என்ற தனுஷின் செல்ஃபோன் ஒலிக்கிறது. எதிர்முனையில் அவரது மகன் யத்திரா மழலை மாறாத குரலில் ஏதோ பேச அவனுடன் கொஞ்ச ஆரம்பிக்கிறார். இந்த இடைவெளியில் ஸ்ரேயா பக்கம் திரும்பினோம். உங்கள் பாலிவுட் முயற்சி தோல்வி என பிரபல செய்தித்தாளில் செய்தி வந்த்தே என்றோம்.
“ அவங்களுக்கு தேவை செய்தி அவ்வளவுதான். என் பேவரைட் ஹீரோ சல்மான் கானுடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு கை நழுவி போனது உண்மைதான். அதனால் வருத்தப்படுகிறேன். அதற்கு கால்ஷீட் பிரச்னைதான் காரணம். இதற்க்காக எனக்கான பாலிவுட் வாய்ப்புகளின் கதவுகள் முற்றாக அடைத்து விட்டதாகச் சொல்வது கற்பனை.” என்றவரை நல்ல மூடுக்கு கொண்டுவர “கடந்த ஆக்டோபரில் டொரான்டோ பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்று திரும்பியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?என்றதும் உற்சாகமாகி விட்டார்.
“அது போன்ற அணுபவம் எப்போதாவதுதான் அமையும். தீபா மேத்தா தயாரிப்பில் அவரது சகோதரர் திலீப் மேத்தா இயக்கிய படம் "வாட்ஸ் குக்கிங்'. டெல்லியில் பரபரப்பான பகுதியில் வாழும் பெண் வேடத்தில் நான். வீட்டு வேலைகள் செய்யும் பெண்ணாக நடித்தது எனக்கு உண்மையில் புது அணுபவம்.” என்றவரிடம் அவர் சமீபத்தில் நடித்திருக்கும் படங்கள் பற்றிகேட்டதும் சின்சியராக்க் பதில் சொன்னார்.
குட்டியில் கல்லூரி மாணவியாக வருகிறேன். ஜக்குபாயில் லிமிடெட் க்ளாமர் இருக்கும். அப்பா, மகளுக்கும் இடையில் இருக்கிற பாசப் போரட்டத்தின் கதை இது. வெளிநாட்டில் தொடங்கி வெளிநாட்டிலே முடியும் படம். அடுத்து சிக்கு புக்கு காதல் கதை. ஆர்யாவுடன் நடித்துள்ள இந்தப் படம் எனக்கு சினிமாவில் புதிய இடத்தை தரும். காதல், நட்பு, மோதல் என சுவாரஸ்யமான கதை இது.” என்றவர் அவர்கிட்டயும் கேளுங்க என்றார்.
இம்முறை தனுஷ் எதிர்கொண்டது சூப்பர்ஸ்டார் வாரிசு நான் இல்லன்னு அறிவிக்க வேண்டிய சூழல் வந்தது பற்றி... “ இந்த நம்பர் ஒண்ணு வாரிசு மேட்டர் எல்லாமே சுத்த ஹம்பக். நாம நல்ல பண்ணிட்டு கம்முன்னு இருந்தாலே நமக்கு வரவேண்டியது வந்து சேரும். என்னோட அங்கிளுக்கு கிடைச்ச சூப்பர் ஸ்டார் பட்டம் அவரா போட்டுகிட்டது இல்ல. அவருக்கு ரசிகர்கள் கொடுத்தது. இதுக்கு பின்னாடி அவரோட உழைப்புதான் இருக்கே தவிர அலட்டல் இல்ல” என்ற தனுஷ்க்கு மீண்டும் செல்ஃபோன் வர “ ஒகே விஷ் யூ அ வெரி ஸ்வீட் பொங்கல். ஐ அம் லிவிங் திருப்பதி டு நைட்” ” என்று சொல்லி நம்மிடமும் ஸ்ரேயாவிடம் கை குலுக்கி விட்டு பறந்தார். ரஜினியைப் போலவே ஒவ்வொரு பட வெளியீட்டுக்கு முன்னரும் திருப்பதி போய் வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிரார் தனுஷ்.

Comments
Post a Comment