சென்னையில் பார்ட்டி கொண்டாடிய அசோக் அமிர்தராஜ்!



ஹாலிவுட்டில் 100 படங்களுக்கு மேல் தயாரித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் அசோக் அமிர்தராஜ்.

30 ஆண்டுகளாக அங்கே தயாரிப்பாளராகத் திகழும் அமிர்தராஜ், பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமர்தராஜின் சகோதரர். இவரும் விம்பிள்டன் உள்ளிட்ட பல சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆடியுள்ளார்.

ஆங்கிலத்தில் தி பேன்தம், வாக்கிங் டால், பிரிங்கிங் டவுன் தி ஹவுஸ் என பல படங்களைத் தயாரித்துள்ளார்.

தமிழில் ஜீன்ஸ் படத்தை தயாரித்து வெற்றி கண்டார். ஹாலிவுட்டில் இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்திய ஒரே ஆசியர் அசோக் அமிர்தராஜ்தான்.

100 படங்களுக்கு மேல் தயாரித்த அவரது ஹைட் பார்க் எண்டர்டெயின்மென்ட் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விருந்தில் தமிழ் திரையுலக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இயக்குநர் மணி ரத்னம், அவர் மனைவி சுஹாஸினி, நடிகர் நாசர், ஒய்ஜி மகேந்திரன், தயாரிப்பாளர் எம்எஸ் குகன், ராம்குமார் என பலரும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

அசோக் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ், ராபர்ட் அமிர்தராஜ் மற்றும் மாகி அமிர்தராஜ் அனைவரையும் வரவேற்றனர்.

Comments

Most Recent