அம்பாசமுத்திரம், டிச. 23: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை ராதாரவி நடித்த வள்ளி விலாஸ் நாடகசபா சினிமா படப்பிட...
அம்பாசமுத்திரம், டிச. 23: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை ராதாரவி நடித்த வள்ளி விலாஸ் நாடகசபா சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.
சத்யா பிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு பாரதிமோகன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இணை இசை அமைத்து இயக்குகிறார்.
திருநெல்வேலி, மதுரை பகுதியில் வசித்து வந்த நாடக குழுவினரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படம் தயாரிக்கப்பட்டுவருகிறது. ராதாரவி வடிவேல்வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய்பிரகாஷ் நாயகனாகவும், ஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு 14 வயது மாணவர் ராகுல்கிஹானி இசை அமைக்கிறார். 7 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஸ்ரீதரன் ஒளிப்பதிவு செய்கிறார். வையாபுரி, குமரேசன், அனுமோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படக் காட்சிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, அரிகேசவநல்லூர், திருப்புடைமருதூர் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமை கல்லிடைக்குறிச்சி திம்மராஜசமுத்திரத்தில் கன்னடியன் கால்வாய் பகுதியில் ராதாரவி, குமரேசன், வையாபுரி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
திரைப்படத்துறையில் சினிமா வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், நாடகக்கலை அழிந்து வருகிறது. எனவே நாடகக் குழுவினரின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கி வருகிறோம் என்றார் இயக்குநர் பாரதிமோகன்.

Comments
Post a Comment