இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளையின் நிதியுதவிக்காக, அவருடைய அரிய புகைப்படங்களுடன் கூடிய...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளையின் நிதியுதவிக்காக, அவருடைய அரிய புகைப்படங்களுடன் கூடிய 2010}ம் ஆண்டு காலண்டர் வெளியிடப்படுகிறது.ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை, தற்போது சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் 30 மாணவர்களுக்கு இலவச இசைக் கல்வியைப் பயிற்றுவித்து வருகிறது. வரும் ஆண்டிலிருந்து மேலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு இசைக் கல்வியைப் பயிற்றுவிக்கத் திட்டமிட்டுள்ளது.இதற்கு நிதி சேர்க்கும் வகையில் ஆடியோ மீடியா எஜுகேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான வேர்ல்டுவைடு நிறுவனம் இந்த காலண்டரை வெளியிடுகிறது. இந்த காலண்டர் } இசை, மொழி, காதல் ஆகியவற்றை தலைப்புகளாகக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானின்மேற்கோள்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காலண்டரைப் பெற www.arrahman.com என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
Comments
Post a Comment