ராஜலீலை


ஹிந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற "ஹவா' படம்,​​ "ராஜலீலை' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது.​ இதில் தபு கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கணவனை விட்டுப் பிரிந்த இளம் நாயகி,​​ தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் இமயமலை அடிவாரத்தில் வசித்து வருகிறார்.​ ஓர் இரவு,​​ பலத்த இடியுடன் கூடிய மழை பெய்கிறது.​ நாயகியின் வீட்டில் உள்ள தோட்டத்தில் இடி காரணமாக பூமியில் விரிசல் ஏற்படுகிறது.​ அதிலிருந்து,​​ ஏற்கெனவே புதைக்கப்பட்ட ஒரு மனிதனின் ஆவி வெளியேறுகிறது.​ அந்த ஆவிக்கும் நாயகிக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களைக் கூறுவதே கதை.​ இதை திகில் கலந்து விறுவிறுப்புடன் இயக்கியிருக்கிறார் ​ குட்டு தனோவா.​ நாயகி தபுவின் நடிப்பு,​​ கிராஃபிக்ஸ் காட்சிகள்,​​ தீலீப்சென்}சமீர்சென் ஆகியோரின் மிரட்டல் இசை போன்றவை படத்தின் பலம்.​ இந்தப் படத்தை குருராஜா இண்டர்நேஷனல் பிலிம்ஸ்,​​ ஜனவரி மாதம் வெளியிடுகிறது.

Comments

Most Recent