'குட்டி'க்கு ஒத்துழைக்க மறுப்பா?-தனுஷ் விளக்கம்



மாமனார் வழியில் இப்போது பட வெளியீட்டுக்கு முன் திருப்பதி செல்லத் துவங்கியுள்ளார் தனுஷ்.

ஒவ்வொரு பட வெளியீட்டுக்கு முன்னும் திருப்பதி போய் ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு வருவது ரஜினி வழக்கம்.

இப்போது அதை அப்படியே பின்பற்றத் துவங்கியுள்ளார் அவரது மருமகன் தனுஷும்.

பொங்கலுக்கு அவர் நடித்த குட்டி திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படம் வெளியாவதையொட்டி ஏழுமலையானைத் தரிசிக்க நேற்று திருப்பதி போனார் தனுஷ்.

மனைவி ஐஸ்வர்யா, மகன் யாத்ராவுடன் அவர் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையானுக்கு நடந்த சிறப்புப் பூஜையில் அவர்கள் கலந்து கொண்டனர்.

'குட்டி'க்கு ஒத்துழைக்க மறுப்பா?

இதற்கிடையே, குட்டி படம் வெளியாவதற்கு தான் முழுமையான ஒத்துழைப்புக் கொடுத்துள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் பிரஸ் மீட் மற்றும் ஆடியோ வெளியீடு எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார் தனுஷ்.

இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு, "குட்டி என் படம். அதற்கு நான் எப்படி ஒத்துழைக்காமல் இருப்பேன்... இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது. பெரிய வெற்றியைப் பெறும்" என்றார் தனுஷ்.

Comments

Most Recent