கோவாவில் இளையராஜா-எஸ்பிபி!



புதுப்புது அர்த்தங்கள் என்ற படத்தில் 'எடுத்து நான் விடவா...' என்று ஒரு பாடல். இளையராஜாவின் அசத்தலான மெட்டில் வெளிவந்த அந்தப் பாடல் இன்றும் ரசிகர்களின் மனங்களில் ரீங்காரமிடும் ஒன்று.

இந்தப் பாடலை இளையராஜாவுடன் இணைந்து எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியிருப்பார்.

பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து பாடியுள்ளது, கோவா திரைப்படத்துக்காக.

கோவா படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா போட்டுள்ள 9 பாடல்களில் ஹைலைட் இந்த ராஜா - எஸ்பிபி டூயட்தான் என்கிறார்கள், இன்டர்நெட்டில் படத்தின் பாடல்களைக் கேட்டுவிட்டவர்கள்.

இந்த படத்தில் மேலும் ஒரு பாடலையும் பாடியுள்ளாராம் இளையராஜா.

கோவா ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடக்க உள்ளது. முதல் சிடியை வெளியிடுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இதற்கிடையே, படத்தின் வெளியீட்டு உரிமையை சன் வாங்குவதாக செய்திகள் பரவியதுமே படத்தின் வியாபாரம் குறித்து ஏக விசாரிப்புகளாம். நிறைய சோதனைகளைப் பார்த்துவிட்ட சௌந்தர்யாவுக்கு இதில் ஏக சந்தோஷம்.

Comments

Most Recent