விழுப்புரம், டிச. 18: சினிமா இல்லாத நியூஸ் பிளஸ் என்ற புதிய சேனல் வரும் பொங்கலுக்கு செயல்படத் தொடங்...
விழுப்புரம், டிச. 18: சினிமா இல்லாத நியூஸ் பிளஸ் என்ற புதிய சேனல் வரும் பொங்கலுக்கு செயல்படத் தொடங்கும் என்று இந்திய சமூக நீதி இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் எம்.எஸ்ரா சற்குணம் தெரிவித்தார்.இது குறித்து இவர் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சினிமா இல்லாத புதிய சேனல் வரும் பொங்கலுக்குள் தொடங்க உள்ளோம். இந்த சேனலில் செய்திகள் மற்றும் மக்களுக்கு தேவையான, அறிவை பெருக்கிக் கொள்ளக்கூடிய தகவல்கள் வழங்கப்படும்.கிறிஸ்தவம் தொடர்பான நிகழ்ச்சி தினமும் 4 மணி நேரம் ஒளிபரப்பாகும். இதற்கு விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபாகர் ஜெயராஜ் நிர்வாக இயக்குநராக இருப்பார் என்றார். பேட்டியின்போது இந்திய சமூக நீதி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் ஜெயராஜ் உடனிருந்தார்.
Comments
Post a Comment