"3 இடியட்ஸ்' படத்துக்காக வித்தியாசமான கேம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார் அமீர்கான். இந்தியாவின் முக்கியமான நகரங்...
"3 இடியட்ஸ்' படத்துக்காக வித்தியாசமான கேம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார் அமீர்கான். இந்தியாவின் முக்கியமான நகரங்களில் உள்ள தியேட்டர்களுக்கு வெவ்வேறு கெட் அப்புகளில் செல்லும் அமீரை கண்டுபிடிக்கும் ரசிகருடன் அந்த தியேட்டரிலே அமர்ந்து படம் பார்க்க போகிறாராம்.
மாதவனுடன் ஏர்செல் விளம்பரத்தில் சினேகம் பேசிய வித்யாபாலன் "பா' படத்துக்குப் பின்னும் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம். "பா' படத்தின் மெகா ஹிட்டுக்குப் பின் விளம்பரத்துக்கான சம்பளத்தை ஏற்றி விளம்பர கம்பெனிகளுக்கு அதிர்ச்சியும் கொடுத்திருக்கிறாராம் வித்யாபாலன்.
விஜய் டி.வி.யின் "நடந்தது என்ன?' நிகழ்ச்சியில் பத்து துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துக் கொண்டு துறை சார்ந்த இந்தாண்டு நிகழ்வுகளை விளக்கப் போகிறார்களாம். இதில் சினிமா, அரசியல், சமுகம், பொது நலம் என பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி டிசம்பர் 31}ம் தேதி இரவு ஒளிபரப்பாகிறது.
தயாநிதி அழகிரி தயாரிக்கும் தமிழ் படத்தில் கஸ்தூரி ரீ எண்ட்ரி கொடுக்கிறார். "மாஞ்சா வேலு' உள்ளிட்ட சில படங்களில் கமர்ஷியலாக வந்து போன கஸ்தூரி, இந்த படத்துக்காக கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறாராம். பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் கஸ்தூரியின் கவர்ச்சியைச் சொல்லி பெருமையடித்துள்ளது படக்குழு.
ஜீ டி.வி.யின் தமிழ் பதிப்பு 24 மணி நேர செய்திசேனலாக்கப்படும் எனத் தெரிகிறது. 5 வருடங்களுக்கு முன் ஆரம்பித்து நிறுத்தப்பட்ட ஜீ டி.வி.யின் தமிழ் பதிப்பு, சமீப காலத்தில்தான் புதுப் பொலிவு பெற்றது. மீண்டும் நிறுத்தத்துக்கு உள்ளாகி செய்தி சேனலாக உருமாறுகிறது. இதையடுத்து மியூசிக் சேனல் ஒன்றையும் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கப் போகிறதாம்.
எஸ்.எஸ். மியூசிக் தொகுப்பாளினி வேலைக்குப் பின் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார் லேகா வாஷிங்டன். தமிழ் சினிமாவின் புறக்கணிப்புதான் மலையாளக் கரையோரம் லேகா ஒதுங்க காரணம். இப்போது ஸ்ரேயா மற்றும் ரீமாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள லேகாவிற்கு சில வாய்ப்புகளுக்கு சிபாரிசு செய்துள்ளார்களாம் தோழியர் .
2010 பிறப்பதற்கு முதல் நாள் இரவு தமன்னாவின் நடனத்தை ரூ 2 கோடிக்கு விலை பேசியிருந்ததாம் சென்னையின் பிரபலமான ஸ்டார் ஹோட்டல். சினிமாவின் நம்பர் ஒன் நாயகி என்ற எதிர்பார்ப்பு எகிறியிருப்பதால், ஸ்டார் ஹோட்டலின் அழைப்பை நிராகரித்து விட்டு, ஹைதராபாத்தில் எளிய முறையில் புது வருடத்தை வரவேற்கப் போகிறாராம் தமன்னா.
இந்த வருடத்துக்கான சினிமா விருதுகளை வழங்கியிருக்கிறது ஜெயா டி.வி. "வர்ணஜாலம்' என்ற பெயரில் நடந்த இவ்விழாவில், அபிநயா (நாடோடிகள்), ஷம்மு (காஞ்சிவரம்), நா.முத்துக்குமார் (சிவா மனசுல சக்தி) சுசீந்திரன் (வெண்ணிலா கபடி குழு) எனப் பலருக்கு விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.
சன் டி.வி.யோடு பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் ராதிகா. ரேடான் மீடியா ஆரம்பித்து சீரியல்களை தயாரித்து நடிக்க துவங்கிய ராதிகாவின் வெற்றி "சித்தி', "அரசி', "செல்வி' என நீள்கிறது. இந்த பட்டியலில் இன்னும் 2 சீரியல்களை சன் டி.வி.க்காக களம் இறக்க காத்திருக்கிறாராம்
Comments
Post a Comment