காதல் தோல்வி? - சந்தியா பதில்



மீடியாவில் சமீப நாட்களில் அதிகம் 'அடிபடும்' ஜோடி பாக்யராஜ் மகன் சாந்தனு - சந்தியாதான்.

இருவருக்குமே சுத்தமாக மார்க்கெட் கிடையாது. ஒரு வேளை பரபரப்புக்காக கிளப்பிவிடுகிறார்களோ?

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் பட பிரஸ் மீட்டில் இதுகுறித்து சந்தியாவிடம் கேட்டபோது,

"அய்யோ... அது ஏன் இப்படி கிளப்பிவிடுறாங்கன்னே தெரியல. எனக்கும் சாந்தனுவுக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அதை காதல் என்று தவறாக பரப்பி வருகிறார்கள். காதலே இல்லை என்கிறேன். இதில் காதல் தோல்வியா என்று கேட்டால் எப்படி? இப்படியெல்லாம் பரபரப்பு தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை", என்றார்.

சாந்தனுவிடம் இதுபற்றி கேட்டபோது,

"சந்தியாவும், நானும் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை. அவர் என் அக்காவோட பிரண்ட். இருவரும் சேர்ந்து சுற்றுவார்கள். எனக்கும் சந்தியா நல்ல 'ஃபிரண்ட்' அவ்வளவுதான். எங்களுக்குள் காதல் என்று தமிழ்ப்பட உலகில் மட்டுமல்ல கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் கூட பரவியுள்ளது. இன்னும் சிலர் காதல் தோல்வியாகி விட்டதாகவும் கூறி வருகின்றனர்.

திருமணத்தை பொறுத்தவரை நான் என்ன முடிவு எடுக்கிறேனோ அதற்கு சம்மதம் என்று என் அப்பாவும், அம்மாவும் கூறி விட்டனர் என்றனர். மனைவி நடிகையாக இருந்தாலும் தவறில்லை..." என்றார்.

Comments

Most Recent