சினிமா துறைக்கு சலுகை மேல் சலுகையாகத் தந்து வரும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி கூறும் விதத்தில் கோட்டைக்குப் பேரணி செல்கிறார்கள் தமிழ்...
சினிமா துறைக்கு சலுகை மேல் சலுகையாகத் தந்து வரும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி கூறும் விதத்தில் கோட்டைக்குப் பேரணி செல்கிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.
திரைப்பட நகரம், சினிமா தொழிலாளர்களுக்கு வீடுகள், இலவச இடம், வரிச்சலுகைகள் என தொடர்ந்து அறிவித்து வருகிறார் கருணாநிதி. இதற்காக தொடர்ந்து திரையுலகின் சார்பில் பாராட்டு விழாக்களையும் நடத்தி வருகிறார்கள் கருணாநிதிக்கு.
இந்நிலையில், சமீபத்தில் புதிதாக திரைப்பட நகரம் அமைக்க கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரவிக்கும் வகையில் திரையுலகின் கோட்டைக்கு ஊர்வலம் போகிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை-
உயிர் கொடுத்து எம்மை உலகில் உலவவிட்ட தாய்க்கு நாம் நன்றி சொல்ல முடியாதோ, அதே போல்தான் தாயுள்ளத்தோடு கருணையின் உச்சத்தில் நின்று, குந்தக் குடிசை கூட இல்லாமல், நிரந்தர வருமானமோ, நிலையான தொழிலோ இல்லாமல் சினிமாவை நம்பி அல்லப்பட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ, நிலமும் பிழைக்க திரைப்பட நகரமும், தயாரிப்பாளர்கள் இணைந்து வாழ்ந்திட அதே இடத்தில் வீட்டுமனையும் தந்து, தமிழ்த் திரையுலகை வாழ வைத்திருக்கும் கலை உலகக் காவலர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாமல் தடுமாறி நிற்கிறோம்.
அக்டோபர் 9 ம் தேதி அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர் மாநாட்டில் சொன்னார். அதன் பின்னர் நிலம் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. டிசம்பர் 21 ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் திரைப்பட நகரம் அமைக்க பையனூர் கிராமத்தில் பட்டா எண்ணு டன் சட்டம் நிறைவேற்றப்படுகிறது.
கலைஞர் நகர்...
கலை உலகத்தினர் மீது எந்த அளவு பாசம், பரிவு, கருணை, ஐம்பது ஆண்டு காலமாக கோடம்பாக்கத்துக்குள் சிறைப்பட்டிருந்த தமிழ் சினிமா உலகம் இயற்கை எழில் நிறைந்த விஸ்தீரனமான பழைய மகாபலிபுரம் வீதியுள்ள பையனூருக்கு குடி போகிறது.
கலைஞர் நகர் என்ற எழில் சூழ்ந்த புதிய திரைப்பட நகரம் உருவாகிறது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சின்னத் திரை கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர்கள் அனைவரும் கூடி வாழ, படப்பிடிப் புத்தளங்கள், ஒலிப்பதிவுக் கூடங்கள், வீதிகள் இப்படி ஒரு புதிய திரைப்பட நகரம், கலைஞர் நகர் என்ற பெயரில் உருவாகிறது.
இதற்கான நிலத்தை அளித்து தமிழ்த் திரையுலகின் புதிய அவதாரத்தை உருவாக்கி தந்த எமது முதல்வருக்கு கலை உலகம் காலமெல்லாம் நன்றியோடு நடந்து கொள்ளும்.
மிக விரைவில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகையர், இசையமைப்பாளர்கள், எழுத தாளர்கள், ஃபெப்சியின் 23 சங்க நிர்வாகிகள் அனைத்து தொழிலாளர்கள், சின்னத்திரை கலைஞர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், மக்கள் தொடர்பாளர்கள் ஆக ஒட்டு மொத்த திரையுலகமும் சேர்ந்து மெரினா கடற்கரையிலுள்ள தொழிலாளர் சிலையிலிருந்து கோட்டை வரை ஊர்வலமாக நடந்து சென்று தமிழக முதல் வருக்கு நன்றி சொல்ல இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment