அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருந்தார் அசின். ஆனால் அந்தப் பாத்திரத்தில் தனக்கு வெயிட் இல்லை என்...
அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருந்தார் அசின். ஆனால் அந்தப் பாத்திரத்தில் தனக்கு வெயிட் இல்லை என்று கூறி பின்னர் விலகிக் கொண்டார்.
இப்போது மீண்டும் அபிஷேக்குடன் ஜோடி சேர இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது அசினுக்கு.
இந்தப் புதிய படத்தில் அபிஷேக் ஜோடியாக நடிக்கவிருந்தவர் அவரது ரியல் ஜோடியான ஐஸ்வர்யா ராய். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, இப்போது அந்த இடத்தை அசினுக்கு கொடுக்க முடிவுசெய்துள்ளனர் படத்தை உருவாக்கும் பர்ஹான் அக்தரும் ரிதேஷ் சிந்த்வானியும்.
"கிட்டத்தட்ட இந்தப் படத்தில் அபிஷேக் ஜோடி அசின்தான் என்பது உறுதியாகிவிட்டது. அபிஷேக்கும் அசினும் நல்ல பொருத்தமான ஜோடிதான். நிச்சயம் பாலிவுட்டைக் கலக்குவார்கள்..." என்கிறது பாலிவுட் மீடியா.
எப்படியோ, அடுத்து எந்தப் படம் செய்வது என்ற ஐடியாவே இல்லாமல் இருந்த அசினுக்கு தானாக வந்திருக்கிறது இந்த வாய்ப்பு. ஜெயிப்பாரா பார்க்கலாம்.
Comments
Post a Comment