பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ், 2010ம் ஆண்டை கேரளாவின் படகு இல்லத்திலிருந்து வரவேற்கப் போகிறார். கேரளாவின் எழில் கொஞ்சும் குமரகோம் பகுதியில்...
பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ், 2010ம் ஆண்டை கேரளாவின் படகு இல்லத்திலிருந்து வரவேற்கப் போகிறார்.
கேரளாவின் எழில் கொஞ்சும் குமரகோம் பகுதியில் சொகுசு படகு இல்லத்தில் இரு இரவுகளைக் கழித்து புத்தாண்டை கொண்டாடுகிறார் பிரிட்னி.
இதுகுறித்து பிரிட்னி தரப்பில் கூறுகையில், பிரிட்னிக்கு இந்தியாவைப் பிடிக்கும். கேரளா மீது தற்போது அவருக்குப் புதுக் காதல் பிறந்துள்ளது. தனது நண்பர் ஒருவருடன் பிரிட்னி கேரளா வருகிறார். புத்தாண்டை அவர் குமரகோம் படகு இல்லத்தில் இருந்தபடி வரவேற்று கொண்டாடவுள்ளார் என்றார்.
இருப்பினும் பிரிட்னியின் கேரள சுற்றுப்பயணம் குறித்த பிற தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எந்தவித பப்ளிசிட்டி வெளிச்சமும் தன் மீது பட்டு விடக் கூடாது என்று படு கவனமாக இருக்கிறாராம் பிரிட்னி. மிகவும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் புத்தாண்டைக் கொண்டாட அவர் விரும்புகிறாராம்.
புத்தாண்டைக் கொண்டாடி முடித்தவுடன் கேரளாவின் எழில் கொஞ்சும் சில பகுதிகளில் தனது புதிய ஆல்பத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்கிறார் பிரிட்னி. இந்தப் புதிய ஆல்பத்தில் கேரளாவின் கதகளி நடனமும், கோவில் யானைகளும் இடம் பெறவுள்ளதாம்.
Comments
Post a Comment