விலை

எஸ்.பி.பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 'விலை' என்ற பெயரில் புதிய படத்தைத் தயாரிக்கிறது.​ இதில் சரவணன்,​​ 'சிலந்தி' சந்துரு,​​ 'நாடோடிகள்' பரணி,​​ உதயதாரா,​​ ரீத்து ஆகியோருடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கிய வேடத்தில் பானுசந்தர் நடிக்கிறார்.

கதை,​​ திரைக்கதை அமைத்து படத்தை இயக்குபவர் ஜி.காமராஜ்.​ இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் 'விலை' பற்றி கேட்டபோது...

''இது ஆள் கடத்தல் பற்றி வித்தியாசமான கதையம்சத்தில் உருவான படம்.​ வழக்கமான சினிமாத்தனம் எதுவும் படத்தில் இருக்காது.​ கதை,​​ திரைக்கதை,​​ காட்சிப்படுத்தும் முறை என எல்லாவற்றிலும் சினிமா மரபுகளை மீறியிருக்கிறோம்.​ படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் இதுவரை எந்தப் படத்திலும் இடம்பெறாதவை.

மதுரையை மையமாக வைத்துப் படத்தை உருவாக்கியுள்ளோம்.​ பெரியபாளையத்துக்கு அருகில் உள்ள திருக்கண்டலம்,​​ ஆந்திர நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்கியுள்ளோம்.​ பல படங்களில் 'இது கற்பனைக் கதை;​ கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல' என்று அறிவிப்பார்கள்.​ ஆனால் 'விலை' படம் 'பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சிலரைப் பற்றி குறிப்பிடும் படம்' என்றார்.​ வசனம் -​ கோமதிசெழியன்.​ இசை -​ டி.இமான்.​ பாடல்கள் -​ சினேகன்.​ ஒளிப்பதிவு -​ பிரபாகர்.​ தயாரிப்பு -​ சத்யா,​​ பாபு.

Comments

Most Recent