சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் நடிகைகள் நமீதா, ரீம்மா (ரீமா சென்தான்), சோனியா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்ட...
சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் நடிகைகள் நமீதா, ரீம்மா (ரீமா சென்தான்), சோனியா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் வந்து விட்டது. சென்னையில் கிறிஸ்துமஸையொட்டி பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் களை கட்டியுள்ளன.
சென்னையில் இதுபோன்ற ஒரு கிறிஸ்துமஸ் சிறப்பு பார்ட்டியில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அஜீத், ஷாலினி ஜோடி படு ஜாலியாக, கண் கவர் உடையில் பார்ட்டிக்கு வந்திருந்தது. சிவப்பு நிற கெளனில் ஷாலினி ஜொலித்தார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உற்சாகத்துடன் போட்டோகிராபர்களுக்குப் போஸ் கொடுத்தார். கணேஷ் வெங்கட்ராமன் தனது நண்பர் ஒமருடன் வந்திருந்தார்.
நமீதா, சோனியா அகர்வால் மற்றும் ரீமா ஆகியோரும் டிசைனர் உடைகளில் வந்து கலக்கினர்.
Comments
Post a Comment