'காப்பியடிப்பது என்று முடிவு செய்துவிட்டால் போதும், என் பேச்சை நானே கேக்க மாட்டேன்' என்று தங்களுக்குத் தாங்களே வசனம் பேசிக் கொண்டு ப...
'காப்பியடிப்பது என்று முடிவு செய்துவிட்டால் போதும், என் பேச்சை நானே கேக்க மாட்டேன்' என்று தங்களுக்குத் தாங்களே வசனம் பேசிக் கொண்டு படங்களைச் சுட்டுத் தள்ளுவது கோலிவுட்காரர்களுக்கு கைவந்த கலை.
இந்த கௌபாய் சமாச்சாரமும் அப்படித்தான். குதிரை மீது அமர்ந்தபடி கால்நடைகளைப் பராமரிப்பவனைத்தான் வெள்ளைக்காரர்கள் கௌபாய் என்பார்கள். இந்த கௌபாய்களின் முக்கால்வாசி காலம் குதிரைகளின் முதுகு மீதே கழிந்துவிடுமாம்.
முன்பு 50, 60 மற்றும் 70களில் நிறைய கௌபாய் படங்கள் ஹாலிவுட்டில் வந்தன. அவற்றைப் பார்த்து, தமிழில் கௌபாய் படங்கள் எடுக்கிறேன் பேர்வழி என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்சங்கரை வைத்து காமெடி பண்ணார்கள்.
ஆங்கிலப் படங்களில் வருவது போன்ற கௌபாய்கள் இப்போது அமெரிக்காவில் கூட வழக்கொழிந்து போய்விட்டார்களாம். நம் ஊரில் அதிகபட்சம் எருமை மாட்டின் மீது அமர்ந்து போகும் கால்நடை மேய்ப்பவர்களைத்தான் பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் கௌபாய் படம் என்ற அறிவிப்போடு லாரன்ஸை வைத்து ஒரு படம் எடுத்து வருகிறார் இம்சை அரசன் 23-ம் புலிகேசி தந்த சிம்புதேவன்.
கௌபாய் என்று சொல்லிவிட்டு லாரன்ஸையும் குதிரையையும் மட்டும் காட்டினால் போதாது என்பதை உணர்ந்த சி்ம்புதேவன், இந்தப் படத்தில் லட்சுமி ராய், சந்தியா, பத்மப்ரியா என ஏகப்பட்ட கவர்ச்சிக் நாயகிகளையும் உலாவ விட்டுள்ளாராம்.
Comments
Post a Comment