"ஆஹா நம்மைப் போல படைப்பாளிகள் உண்டா... இயக்குநர்கள் உண்டா, நடிகர்கள் உண்டா..!" என தங்களுக்குத் தாங்களே சொறிந்து கொடுத்துக் கொண்டு ...
"ஆஹா நம்மைப் போல படைப்பாளிகள் உண்டா... இயக்குநர்கள் உண்டா, நடிகர்கள் உண்டா..!" என தங்களுக்குத் தாங்களே சொறிந்து கொடுத்துக் கொண்டு சுகமாய் கனவு காண்பதும் விமர்சனங்களைத் தாங்க முடியாமல் பத்திரிகைக்காரர்களைத் திட்டுவதுமதான் கோலிவுட் ஸ்டைல்.
ஆனால் இதற்கெல்லாம் அப்பால் நின்று அசத்தலான படைப்புகளைத் தருவது பாலிவுட் ஸ்டைல். சோம்பேறிகள், நேரத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிக்க மாட்டார்கள் என்றெல்லாம் தென்னிந்தியர்களால் பொத்தாம் பொதுவாகக் குற்றம்சாட்டப்படும் பாலிவுட்டிலிருந்துதான் ஷோலே தொடங்கி தாரே ஜமீன் பார் வரை மகா வித்தியாசமான வணிக,கலைப் படைப்புகள் வந்திருக்கின்றன.
ஆமிர் கான்,மாதவன், ஷர்மான் நடிப்பில் முன்னாபாய் புகழ் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள 3 இடியட்ஸும் அப்படி ஒரு வித்தியாசமான படைப்புதான்.
35 கோடியில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக உலகம் முழுக்க வெளியானது.
ஆமீர்கானே எதிர்பார்க்காத அளவு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது இந்தப் படத்துக்கு. இந்தியாவின் கல்வி முறை குறித்த விமர்சனமாகப் பார்க்கப்படும் இந்தப் படம், ரசிகர்களால் மட்டுமல்ல, விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.
சென்னையி்ல 8 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு தொடர்ந்து ஒரு வாரம் முன்பதிவு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment