புத்தாண்டு ஜூரம் திகு திகுவென தீயாய் பரவ ஆரம்பித்து விட்டது நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில். குறிப்பாக பன்னாட்டு...
புத்தாண்டு ஜூரம் திகு திகுவென தீயாய் பரவ ஆரம்பித்து விட்டது நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில்.
குறிப்பாக பன்னாட்டு கலாச்சாரம் நிலவும் டெல்லி, மும்பை நகரங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்க டாப் நடிகைகளை அழைத்து கவர்ச்சி நடனமாட வைப்பதில் கடும் போட்டியே நிலவுகிறது.
கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகைகளும் ஏதாவது ஒரு ஓட்டலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பிரபல நடிகை பிபாஷா பாசு, டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கவர்ச்சியாட்டம் போட உள்ளார். இதற்காக அவருக்கு பேசப்பட்ட சம்பளம் மட்டும் ரூ 2 கோடியாம்.
31ம் தேதி நள்ளிரவு 15 நிமிடம் ஆட்டம் போடுகிறார் பிபாஷா.
இதுபற்றி பிபாஷா கூறுகையில், "நான் டான்ஸ் ஆடப் போவது உண்மைதான். அதுவும் இந்த நடனத்தைக் காண காதலர் ஜான் குடும்பத்தோடு வருகிறார்.
பெரிய சம்பளம் தருவதாகக் கூறி அழைத்தனர். எனவே சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டேன். இதற்கு முன்பும் ஆடியுள்ளேன். ஆனால் இவ்வளவு சம்பளம் கிடையாது அப்போதெல்லாம. இப்போது ஒரு படத்துக்கான சம்பளம் இந்த ஒரு நடனத்துக்கே தரப்படுகிறது.
புத்தாண்டு மிக மிக மகிழ்ச்சியோடு துவங்குகிறது என்றுதான் சொல்வேன்" என்றார் பிபாஷா.
Comments
Post a Comment