நூறாவது எபிசோடை தொடுகிறது ‘நாதஸ்வரம்’

http://www.tamilkey.com/wp-content/uploads/2010/06/Natheswaram9.jpg
இன்றோடு நூறாவது எபிசோடை தொடுகிறது ‘நாதஸ்வரம்’. சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 7.30 க்கு ஒளிப்பரப்பாகும் மெகா தொடர். கதை பரபரப்பாகி உள்ள நிலையில் இயக்குனர், நடிகர் திருமுருகனிடம் பேசினோம்.

வீட்டுக்கு வீடு, ‘கோபி’ பேச்சா இருக்கே?

ஆமா. சந்தோஷமா இருக்கு. ‘மெட்டி ஒலி’ல என் கேரக்டர் பெயர் கோபி. அந்த தொடருக்கு பிறகு எங்க போனாலும் எல்லாரும் கோபின்னே கூப்பிட்டாங்க. அதனால அடுத்த தொடரான நாதஸ்வரத்துலயும் கோபியை தொடர்றேன். இதுல தையல் கடை வச்சிருக்கிறவனா நடிக்கிறேன். எனக்கும் நாதஸ்வரம் வாசிக்க தெரியும். எப்ப வாசிக்க போகிறேன்கிறது தொடர்ல சஸ்பென்ஸ்.

மகாவா? மலரா? யாரை கட்டிக்க போறீங்கன்னு பட்டிமன்றம் நடக்குதே?

தொடர்கள்ல இந்த பரபரப்பு அவசியம். அடுத்து என்ன நடக்கும்னு யாரும் கணிக்க முடியாம இருக்கணும். மகாவா, மலராங்கறதுக்கு சீக்கிரமே விடை கிடைச்சுடும். அதுக்கப்புறம் இந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் எடுக்கிற முடிவு இன்னும் பரபரப்பாக்கும் தொடரை.

எல்லா சீரியல்களும் குடும்பத்தை மையப்படுத்தியே வருதே?

ஆமா. அது நம்ம கலாசாரம். ஆனா இன்னைக்கு நாம அதை இழந்துட்டு வர்றோம். தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தைன்னு இணைஞ்சு வாழ்ற வாழ்க்கைதான் நமக்கானது. இன்றைய அவரச உலகத்துல, பணம் மட்டுமே பிரதானமா போன பிறகு, புறாக்கூண்டுல வாழ பழகிட்டு, குடும்பங்களை விட்டுட்டோம். கூட்டு குடும்பங்கறது இன்னைக்கு ஏக்கமாவே போயிருச்சு. கிராமங்கள்ல கூட நிலைமை மாறிருச்சு. அதை ஞாபகப்படுத்துற மாதிரி, இப்படியொரு வாழ்க்கை இருந்ததுங்கற மாதிரி, நம்ம மண்ணை, நம்ம அடையாளத்தை காட்டறதுக்காக இந்த மாதிரி தொடரை பண்றோம்.

மாவட்டம் தோறும் நடிகர்களை செலக்ட் பண்ணினீங்க? எப்படி நடிக்கிறாங்க?

பார்த்த முகங்களா இல்லாம, நம்ம பக்கத்து வீட்டுல இருக்கிற மாதிரி, யதார்த்தமான ஆட்களைதான் தேடினேன். ‘நடிக்க வரணும்னா, கலரா இருக்கணும், அழகா இருக்கணு’ங்கற எண்ணத்தை மாத்தறதுக்காக ஒவ்வொரு ஊர்ல இருந்தும் நடிகர்களை தேர்வு பண்ணினோம். எல்லோருமே பிரமாதமா பண்றாங்க.

அடுத்து எப்ப படம் பண்ண போறீங்க?

சீக்கிரமே அறிவிப்பு வரும்.

Comments

Most Recent